ரஷ்யா, மாஸ்கோவில் நடந்த இந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் குரோஷியாவை பிரான்ஸ் தோற்கடித்தது.
இந்த போட்டியில் பலர் பல வர்ணத்தில் காட்சியளித்தனர். எனினும் ரஷ்ய சூப்பர் மாடல் Natalia Vodianova ஆச்சரியத்தில் ஏற்படுத்தும் ஆடையை அணிந்து வந்துள்ளார்.
ரஷ்ய சூப்பர் மாடல் Natalia Vodianova உலகக் கோப்பை கால்பந்து கிண்ணத்தை மைதானத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
“இறுதி போட்டியின் செம்பியன்களின் கிண்ணத்தை மைதாத்திற்கு கொண்டு வருவது குறித்து தான் பெறுமையடைவதாகவும், இது ஒரு வரலாற்று சந்தர்ப்பம்” எனவும் அவர் தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த கிண்ணத்தை மைதானத்திற்கு கொண்டு வரும் போது அவர் அணிந்திருந்த ஆடை அனைவரதும் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளது.
அந்த ஆடை கால்பந்து கிண்ணத்திற்கு சமமானதாக காட்சியளித்துள்ளது. அதில் மின்னிய பொருட்கள் அந்த கோப்பைக்கு ஒத்ததாகவே காணப்பட்டுள்ளது.
அந்த ஆடையில் கழுத்து மூடப்பட்டிருந்ததுடன், அது கிண்ணத்துடன் சரியாக இணைந்தது. பிரான்ஸ் ரசிகர்கள் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.