பிரித்தானியாவில் வீட்டில் பெற்றோருடன் முரண்பாட்டினை ஏற்படுத்தி கொண்ட இரு யுகதிகள் வீட்டை விட்டு வெளியேறி இலங்கை சென்றனர் அங்கு பெளத்த மதத்தில் ஈடுபட்டனர் இதனால் இருவரும் காலப்போக்கி வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றத்தை கண்டனர். இதனால் இருவரும் பிரித்தானியாவிற்கு திரும்பிசென்றனார்.
தங்கள் வீட்டில் யாரை பேச்சையும் கேட்காத இந்த யுவதிகள் இலங்கை வந்ததுடன் முழுமையாக மாற்றமடைந்துள்ளனர்.
அந்த வீட்டில் அனைத்து வேலைகளையும் இவர்களே செய்துள்ளனர். வீட்டில் இருந்து விகாரைக்கு சென்று வர ஆரம்பித்துள்ளனர். பௌத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அந்த வீட்டில் பல கட்டுப்பாடுகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். அங்கு தொலைகாட்சி இல்லை. மேக்கப், மதுபானம், புகைப்பிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் தங்கள் உணவுகளை தாங்களே செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த வீட்டில் தயாரிக்கப்படும் உணவை, பொதி செய்ய உதவ வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அதனை குறித்த இரு யுவதிகளும் விரும்பாத போதிலும், காலப்போக்கில் செய்ய ஆரம்பித்துள்ளனர். அவர்கள் வேலை செய்யும் மக்களின் வாழ்க்கை குறித்து அறிந்து கொண்டனர்.
விகாரையில் நேரம் செலவிட நேரிட்டது. தேரர்களின் கருத்துக்களுக்கு செவி கொடுக்க இருவரும் ஆரம்பித்துள்ளனர். சில காலம் சென்றவருடன் அதன் மீதான ஈர்ப்பு அதிகரிக்க இருவரும் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டுள்னர்.
பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான மாற்றத்துடன் மீண்டும் பிரித்தானியா சென்றுள்ளனர்.குறித்த யுவதிகளின் வாழ்க்கைப்படம் தொடர்பில் ஆவணப்படம் ஒன்று பிரித்தானியாவில் வெளியாகிய பின்னரே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளது