முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.இந்த வெடிபொருட்கள் விடிதலைப் புலிகள் கட்சினர் பதுக்கி வைத்திருப்பார்கள் என பொலிஸார்கள் சந்தேகப்பட்டு வருகின்றனர்.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் இருந்த பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது குறித்த வெடிப்பொருட்கள் இருப்பது நேற்று(புதன்கிழமை) கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில் குறித்த பகுதியில் இன்றைய தினமும் அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகளினால் குறித்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.