Loading...
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பலவந்தமாக பிரிக்கப்பட்ட தமது குடும்பத்தின் மீளிணைவுக்காக, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திலீபன் ஞானேஸ்வரனின் மனைவி கார்த்திகா தெரிவித்துள்ளார்.
த கார்டியனுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
30 வயதான ஞானேஸ்வரன், அவரது மனைவி மற்றும் 11 மாத குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த தினம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
Loading...
அவரால் தமது குடும்பத்தை மீண்டும் சந்திக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தவிடயம் தமக்கும் தமது மகளுக்கும் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன் தாம் தற்போது செய்வதறியாத நிலையில் இருப்பதாகவும் கார்த்திகா குறிப்பிட்டுள்ளார்.
Loading...