பழனியில் இன்று மாலை மாற்றி மணவாளனை நிச்சயிக்க இருந்த இளம்பெண் நேற்று கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு பிணவறைக்கு சென்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவித்ரா என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார், நேற்றிரவு தனது பெரியப்பா மகன் மாயவனுடன் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் சென்றுள்ளார்.
அப்போது, ஆட்டோவில் வைத்து பவித்ராவின் கழுத்தை அறுத்துள்ளார் மாயவன். அலறல் சத்தம் கேட்டதை அடுத்து ஓட்டுநர் திரும்பிப் பார்த்தபோது பவித்ரா ரத்த வெள்ளத்தில் இருக்கையில் கிடந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இதையடுத்து பழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோவில் பயணித்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த பவித்ராவின் சகோதரர் மாயவனை பொலிசார் தேடி வருகின்றனர்.