கலை அமைப்புகளுடன் இணைந்து பௌர்ணமி தினங்கள் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் என்று வவுனியா நகரசபையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் அமர்வில், பௌர்ணமி தினங்களை மையப்படுத்தி நிகழ்வுகளை நடாத்த வேண்டும் என நகரசபை உறுப்பினர் காண்டிபன் கோரிக்கை விடுத்தார்.
நகரசபை பொறுப்பேற்ற நாளில் இருந்து பௌர்ணமி தினங்கள் இன்னும் நாடத்தபடவில்லை எனவே கலாசார அமைப்புகள் மற்றும் மன்றங்களொடு கலந்து பேசி பௌர்ணமி நிகழ்வுகளை தொடர்ந்து நடாத்துவதுடன், நகரசபையின் கீழ் உள்ள இரண்டு மண்டபங்களில் ஒன்றையேனும் இலவசமாக வழங்கி கலை வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
தமிழருடைய கலை கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களை பேணுவதற்கும், அதனை இளம் சந்ததிக்கு ஆரோக்கியமான முறையில் ஒப்படைப்பதற்கும் பௌர்ணமி தினங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
அதற்காக கலை சார்ந்த அமைப்புக்களை உள்ளடக்கிய ஒரு குழுவினை அமைத்து அவர்களுடன் இனைந்து அதனை செயற்படுத்த முடியும் என்றும் கூறியதுடன், வவுனியா நகரசபையின் புதிய கலாசார மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு ஏற்றவாறாக வசதி அமைக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இது சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், கலை அமைப்புகளையும் இணைத்து சபையால் நடாத்தபடும் முதலாவது பௌர்ணமி நாள்நிகழ்வு பிரமாண்டமாக நடாத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது.