வவுனியா காத்தார்சின்ன குளம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் வவுனியா கண்டி வீதியிலுள்ள இலங்கையின் பிரபல லீசிங் நிறுவனத்தில் மோட்டார் சைக்கிள் லீசிங் மூலம் கொள்வனவு செய்துள்ளார்
முதல் கட்டணமாக ரூபா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பணத்தினை கொடுத்து மோட்டார் சைக்கிளை பெற்றுள்ளார் பின் மாதாந்த தவனை கட்டணத்தையும் தவறாது கட்டி முடித்துள்ளார்
மோட்டார் சைக்கிளின் லீசிங் தொகை கட்டணம் முழுவதும் கட்டி முடித்து நான்கு மாதமாகியும் குறித்த பெண்ணிற்கு மோட்டார் சைக்கிளின் உரிம புத்தகம் இதுவரையிலும் குறித்த நிறுவனம் வழங்கவில்லை இதனை கேட்டு குறித்த பெண் பலதடவைகள் நிறுவனத்திற்கு சென்ற போதிலும் சரியான பதிலை அளிக்கவில்லை
எனவே பாதிக்கப்பட்ட பெண் குறித்த நிறுவனத்திற்கு எதிராக வவுனியா தலைமை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்து வவுனியா பொலிஸார் குறித்த நிறுவன கிளை முகாமையாளரை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர் விசாரணைக்கு முகம் கொடுத்த முகாமையாளர் தான் தற்காலிகமாகவே தலைமை காரியாலயத்தால் நியமிக்கப் பட்டுள்ளதாகவும் எனினும் குறித்த மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்யும்பொழுது கடமையிலிருந்த கிளை முகாமையாளர் தமது நிறுவனத்தில் பாரிய நிதி மோசடியில் ஈடுப்பட்டதால் அவரின் மேல், நிறுவனம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே விசாரணைகள் முடிவுற்ற பின்னரே மோட்டார் சைக்கிளுக்கான புத்தகம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸில் தெரிவித்துள்ளார்
எனினும் பொலிஸார் அது உங்கள் நிறுவனத்தின் உள்ளக பிரச்சினை ஏதுவாக இருப்பினும் வாடிக்கையாளரது பிரச்சினையை தீர்க்க வேண்டியது நிறுவனத்தின் கடமை உடனடியாக புத்தகம் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் என முகாமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். எனினும் ஒரு வாரகாலமாகியும் புத்தகம் இன்னமும் வழங்கப்படவில்லை.
பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்படுங்கள் வடக்கு கிழக்கில் தமிழர்களை அழிப்பதற்காகவே திட்டமிட்டு செயற்படுவது போல் நுண்நிதி நிறுவனங்களும் லீசிங் நிறுவனங்களும் செயற்பட்டு வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு பொதுமக்களாகிய நீங்களே குறித்த நிறுவங்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பதன் மூலம் தகுந்த பாடத்தினை கற்பிக்க முடியும்.