சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில், பிரபல நடிகர் விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளார். இந்தவிடயம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்திற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை.
இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகின்றார். ஏற்கனவே அவரது வில்லன் நடிப்பிற்கு பல தரப்பினரால் பாராட்டுக்கள் குவிந்துள்ளது.
இந்த நிலையில் புதிய படத்தில் வில்லனாக நடிப்பதற்கான காரணம் என்ன என்பதனை விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
“ஏற்கனவே தன்னை 4 படங்களில் இயக்குன கார்த்திற்காக இந்த படத்தில் நடிப்பதற்கு நான் ஒப்புக்கொண்டேன். அத்துடன் ரஜினி 4 தசாப்த்தங்களாக சினிமாவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவராகும். ஒவ்வொரு ரசிகர்களினதும், ரசனையை நன்கு அறிந்து கொண்டு நடிக்கும் ஒரு நடிகராக உள்ளார். அவரது நடிப்பு திறனையும், ஈடுபாடு குறித்து அறிந்த கொள்ளவுமே அந்த படத்தை நான் நடிக்க ஏற்றுகொண்டேன்…” என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.