Loading...
சின்னத்திரையில் தென்றல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருதி. இவர் தற்போது அழகு மற்றும் பல சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் மற்றும் பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். எப்போது திருமணம் என கேட்டதற்கு நான் என் வாழ்க்கையில் எதையும் பிளான் செய்வதில்லை. அப்படி பிளான் செய்தாலும் அது நடப்பதில்லை.
Loading...
திருமணமும் அப்படி தான் தற்போது எந்தவொரு ஐடியாவும் இல்லை, நடக்கும் போது நடக்கும் என கூறியுள்ளார். மேலும் எந்த நடிகரை நேரில் பார்க்க ஆசை என கேட்டதற்கு ஷாருக் கானை தான் பார்க்க வேண்டும்.
அவரை நேரில் பார்த்தால் அழுது விடுவேன் அல்லது ப்ரம்மித்து போய் விடுவேன் என கூறியுள்ளார்.அவரை சந்தித்து ஒரு முறை ஹாண்ட் ஷேக் செய்தால் போதும் என கூறியுள்ளார்.
Loading...