Loading...
சீனாவில் பெற்ற தாயை மகன் புல்லை சாப்பிடும் படி கூறி வற்புறுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் Hunan மாகாணத்தின் Dinjia கிராமத்தைச் சேர்ந்த Liang என்ற நபர் தன்னுடைய 80 வயது தாயை இரக்கமின்றி அடித்து புல்லை தின்னும்படி வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Loading...
இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், மனைவியுடன் அவர் தாய் சண்டை போட்ட காரணத்தினால், அவரது வாயை அடைக்க வேண்டும் என்பதற்காக புல்லை வாயில் திணித்ததாகவும், வற்புறுத்தி சாப்பிட வைத்ததாகவும் கூறியுள்ளது.
இந்த தகவல் அங்கிருக்கும் கிராம தலைவர்களுக்கு தெரியவந்ததால் உடனடியாக அவர் பொதுமக்கள் முன்னர் மன்னிப்பு கோரும் படி கூறியுள்ளனர்.
அப்போது Liang, நான் என் அம்மாவை புல் திண்ண வைத்தது உண்மை தான், ஏனெனில் அவர் தன் மனைவியுடன் சண்டை போட்டுகிட்டிருந்தார், அதன் காரணமாகவே இப்படி செய்ததாகவும், நான் என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
Loading...