அமெரிக்காவில் வேலை பார்க்கும் பெண்ணின் பின்னழகை தொட்டதால், அந்த பெண் ஆத்திரமடைந்து அவரை கீழே தள்ளி தாக்கியுள்ளார்.
அமெரிக்காவின் Florida மாகாணத்தில் அமைந்திருக்கும் Vinnie Van Go-Go’s பீட்சா செண்டருக்கு 31 வயது மதிக்கத்தக்க Ryan Cherwinski என்ற நபர் தன் தாய் மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
அப்போது சாப்பிட்டு முடித்தவுடன் வெளியில் வந்த போது அங்கு வேலை பார்க்கும் Emelia Holden(21) பெண்ணின் பின்னழகை தொட்டுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண், ஆத்திரத்தில் அவரை இழுத்து போட்டு அடித்துள்ளார். அதன் பின் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்த போது அது உண்மை என நிரூபிக்கப்பட்டதால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.