ரஜினியின் ‘வாடி என் தங்கச் சிலை’ ஆகிற யோகம், யாருமே எதிர்பார்க்காத ஈஸ்வரிராவுக்கெல்லாம் கிடைக்கும் போது, பத்து வருடமாக ஆசைப்பட்டு வரும் த்ரிஷாவுக்கு மட்டும் அந்த யோகம், சித்த யோகமாக அமையவே இல்லை.
ரஜினி பட அறிவிப்புகள் வரும்போதெல்லாம் தன்னால் இயன்ற முயற்சிகளை செய்து வந்த த்ரிஷா, அல்மோஸ்ட் கடைசி கட்டத்திற்கு வந்திருந்தார்.
இந்த முறை விடக்கூடாது என்று பல்வேறு வகைகளிலும் அவர் ரஜினியுடன் ஜோடி போட எடுத்த முயற்சிகள் ஊடகங்களில் சொல்லப்பட்டன. எழுதப்பட்டன. பட்…? மீண்டும் தன் முயற்சியில் மனம் தளர்ந்தார் த்ரிஷா.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ரஜினி படத்தில், அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறாராம். இந்த தகவல் கிட்டதட்ட உறுதிபடுத்தப்பட்டுவிட்டது. ஒண்ணு போனா இன்னொன்னு வரும் என்று மனசை தேற்றிக் கொள்கிற நிலைமையில் த்ரிஷா இல்லை. ஏன்? ரஜினியே இன்னும் எத்தனை படங்களில் நடிப்பார் என்பது டவுட். தமிழக அரசியல் சூடு பிடித்து, ரஜினிக்கான ஏற்பாடுகள் அவர் நினைத்தது போல அமைத்துக் கொடுக்கப்பட்டால் அவர் கட்சி தொடங்குவது உறுதி. அதற்கப்புறம் சான்ஸ் கிடைக்குமோ என்னவோ?
எதற்கும் ரஜினி கட்சியில் ஏதாவது போஸ்ட்டிங் தேறுதான்னு பாருங்களேன் த்ரிஷா?