பிரபல தொலைக்காட்சியில் தெய்வம் தந்த வீடு என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் மேக்னா. இவர் அந்த சீரியலில் எப்போதும் அழுது கொண்டு இருந்தது தான் அதிகமாக பேசப்பட்டது.
இந்த சீரியலுக்கு பிறகு ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது மீண்டும் புது சீரியலில் கமிட்டாகியுள்ளார்.
முதல் சீரியல் நடித்த அதே தொலைக்காட்சியில் பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. அதில் நடித்துவந்த நாயகிக்கு பதிலாக இவர் புதிதாக கமிட்டாகியுள்ளார்.
அந்த சீரியலின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு இனி நான் தான் உங்களின் புதிய ரோஹினி. இதுவரை கொடுத்த ஆதரவு போல் இனியும் கொடுங்கள் என பதிவு செய்துள்ளார்https://www.facebook.com/meghnaonline/photos/a.1656528587923522.1073741827.1656331031276611/2166863963556646/?type=3&theater