Loading...
யாழ். கொடிகாமம் பகுதியில் தனது வீட்டில் திடீரென வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீரென கோபமுற்ற இளைஞர் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை பிடிப்பதும் பின்னர் வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்துவதுமான செயல்களில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பெற்றோர் மற்றும் அயலவர்கள் இணைந்து குறித்த இளைஞரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துளளனர்.
Loading...
இந்நிலையில் இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த இளைஞருக்கு மனநல மருத்துவ சிகிச்சையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Loading...