தமிழ்நாட்டில் கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சியை சேர்ந்த சித்ரா என்பவர் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய சகாயராஜ் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சகாயராஜூக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை சித்ரா தெரிந்து கொண்டதால் தம்பதிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
சித்ரா எவ்வளவு கூறியும் அந்த பெண்ணுடனான தொடர்பை விட சகாயராஜ் மறுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை சித்ரா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சகாயராஜ் மற்றும் அவர் பெற்றோர் பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் சித்ராவின் தற்கொலை முடிவுக்கு சகாயராஜே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.