வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 6 வயதான சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த ஷர்மிளரூபன் யக்ஷிதா என்ற 6 வயது சிறுமி கடந்த 18ஆம் திகதி திடீரென்று மயக்கமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிறுமி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி பிறந்த சில நாட்களில் அவசியத் தேவை கருதி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். எனினும் அதன் பின்னர் ஆரோக்கியமாகவே இருந்துள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே திடீரென மயக்கமுற்ற நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சிறுமியின் மூளையில் கிருமித்தாக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.