BCCI தன்னுடைய, உத்தியோகபூர்வ இணையதள இந்திய அணியின் தலைவராக இன்னமும் தோனியின் பெயரையே வைத்துள்ளது.
இணையத்தள பக்கத்தில் தோனி பெயருக்கு அருகில் கேப்டன் என பதிவிடப்பட்டுள்ளமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து தோனி உத்தியோகபூர்வமாக விலகி கொண்டார்.
அதன் பின்னர் விராட் கோஹ்லி இந்திய அணி தலைவராக பெயரிடப்பட்டார். எனினும் BCCI தன்னுடைய, உத்தியோகபூர்வ இணையதள இந்திய அணியின் தலைவராக தோனியை குறிப்பிட்டுள்ளது.
இதனால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த போதிலும், கோஹ்லி ரசிகர்கள் கடும் கோபத்துடன் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் குழப்பமடைந்த பின்னர் BCCI தன்னுடைய, உத்தியோகபூர்வ இணையதள இந்திய அணியின் தலைவராக கோஹ்லியை பதிவிட்டுள்ளது.
எனினும் மாற்றுவதற்கு முன்னரே அதனை புகைப்படம் எடுத்த ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.