அரசு பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தனியார் வகுப்புகள்(ரியூஷன்) நடத்த முடியாது எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
அவ்வாறு வகுப்புகளை னடத்துவது சட்ட பூர்வமானதல்லவென கல்வியாளரும் சட்டதாரணியுமான சமரசிங்க குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் சம்பளம் பெறுபவர்கள் என்பதோடு அந்த சட்ட ஏற்பாடுகள் இனங்க அவர்கள் வேறு தொழில் செய்வது சட்டவிரோதமானது.குறிப்பிட்ட சில அரசு பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், பாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புகளுக்கு செல்வதனால் பாடத்திட்டத்தினை முழுமையாக முடிக்க இயலாமல் போகிறது.
அவ்வாறான ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகள் மூலம் மேலதிக பணம் மீட்டுவது, மேலதிக வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களை பலவந்தபடுத்துவது அவ்வாறு சமுகமளித்திராத மாணவர்களை பாடசாலையில் ஓர வஞ்சனையுடன் நடத்துவது தொடர்பான நிகழ்வுகள் தற்போது தெரியவந்துள்ளன.