சர்வதேச அடிமைக் குறியீட்டின் உத்தியோகபூர்வ அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் நியுயோர்க் தலைமையகத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அடிமைச் சுட்டெண் விபரங்கள் வோக் பிரி நிதியத்தினால் வருடாந்தம் வெளியீடு செய்யப்படும்.
உலக அளவில் சுமார் 40.3 மில்லியன் ஆண், பெண் மற்றும் சிறார்கள் நவீன அடிமைகளாக வாழ்கின்றனர்.
4 வது பதிப்பு, 2018 உலகளாவிய அடிமை குறியீட்டு நெருக்கடி உலகின் மிக தீவிரமான ஆய்வாக கருதப்படுகிறது.
இது நாட்டுக்கு நாடு நவீன அடிமைத்தனம் தொடர்பான அளவீட்டை வெளிப்படுத்துகிறது.
பொது மக்கள் பாதிக்கப்படும் தன்மை மற்றும் குற்றச் செயல்கள் என்பன நாட்டின் அபாயமிக்க காரணிகளாக இருக்கின்றன.
நவீன கால அடிமைத்தனம் எங்கு நடைபெறுகிறது என்பதை பரிசோதித்துப் பார்க்கும்போது, 2018 பதிப்பில் குற்றங்களுக்கான காரணங்கள் எங்கு தோன்றுகின்றன மற்றும் அதன் பாதிப்பு எங்கே தாக்கம் செலுத்துகின்றன என்பது குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அபிவிருத்தியடைந்த ஜி20 நாடுகள் ஒவ்வொரு ஆண்டிலும் 354 பில்லியன் டொலர்க்கு அதிகமான அபாயமிக்க தயாரிப்புகளை இறக்குமதி செய்கின்றன.
அந்த வகையில் அமெரிக்க மட்டும் 145 பில்லியனுக்கான இறக்குமதிக்கு பொறுப்பு கூறுகின்றது.
வர்த்தக ஸ்தாபனங்களும் அரசாங்கங்களும் நவீன அடிமைத்தனத்தை அகற்றுவதற்கு கட்டாயமாக விநியோக சங்கிலிகளை ஆராய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் புதிய சுட்டெண் வலியுறுத்துகின்றது.
அந்தவகையில், நவீன அடிமைத்தனத்திற்கு பதிலளிக்க மிக அதிகமான நடவடிக்கை எடுக்கும் அரசாங்கங்களாவன நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பனவாகும்.
வட கொரியா, லிபியா மற்றும் எரிட்ரியா ஆகியவை குறைந்த பட்ச நடவடிக்கை எடுக்கின்றன.
அந்தவகையில், இலங்கை 167 நாடுகளில் 130 வது இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு நவீன அடிமைத்தனத்தில் வாழும் 44,000 நபர்களைக் கொண்டுள்ளது.