Loading...
மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு காயமடைந்த 11 வயது மாணவன் 3 பற்களை இழந்தார்.
சிறுவனை மோட்டார் சைக்கிளால் மோதிய பெண் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Loading...
மிருசுவில் தவசிகுளத்தைச் சேர்ந்த 11 வயது மாணவன், தனியார் கல்வி நிலையத்திற்குச் செல்வதற்காக சாலையோரத்தில் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்த வேளையில், அலைபேசியில் உரையாடியவாறு வந்த பெண், மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர், மாணவன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Loading...