முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் நேற்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதோடு அபாயகரமான வெடிபொருட்கள் பல மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன்போது கிணற்றுக்குள் அபயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு கடற்படை உயர் அதிகாரி விக்ரம்சிங்க( Rear admiral Wikramsingke) தலைமையில் நேற்று முன்தினம் அந்தப்பகுதிக்கு சென்ற பொலிஸாரும் கடற்படையின் விசேட இராணுவ அணியினரும் அகழ்வு பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய பசீலன் 2000 ஆட்லறி செல் இரண்டு உட்பட இராணுவ வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அகழ்வு பணி நேற்று முன்தினம் பிற்பகல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் நேற்றும் தொடர்ந்து இடம்பெற்றது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போதும் அதிகளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டன இதனைத் தொடர்ந்து நேற்று இடம்பெற்ற அகழ்வு பணியில் கிணறு முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு ஆயுதங்கள் பல மீட்கப்படுள்ளன.
குறித்த அகழ்வுப்பணி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.