வீடு, அலுவலகம் துவங்கி பொது இடங்கள் வரை எல்லா இடங்களிலும் செல்பி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உலகம் முழுவதும் இன்றைய தலைமுறையை அதிகமாகவே ஆட்கொண்டிருக்கிறது. அதன் காரணமாக பல விபரீதங்களும் நிகழ்கின்றன.
அப்படியானதோர் விபரீதம் ரஷ்யாவில் சிறுமி ஒருத்திக்கு நேர்ந்துள்ளது. ரஷ்யாவின் உள்யானோவஸ்க் என்ற பகுதியில், 13 வயது சிறுமி ஒருவர் ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்துகொண்டிருந்தபோது, கால் இடறி, 3 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் மின் கம்பிகளில் சிக்கி கொண்டார்.
13 அடி உயரத்தில் சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்ட ரயில் ஓட்டுனர் மின்சாரத்தை நிறுத்தி சிறுமியை மீட்டுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி சுயநினைவின்றி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரயில்வே பாதை உள்ளிட்ட இடங்களில் நின்று செல்பி எடுக்க முயல்வது குற்றம் என்பதுடன், உயிருக்கு உலை வைக்க கூடிய செயல் என்பதும் குறிப்பிடத்தக்கதுவே