ரஷ்யாவில் தனது காதலியை கொடூரமாக கொலை செய்து, அவளது மூளையை வறுத்து தின்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாஸ்கோ:
ரஷ்யாவில் டிமிரிட்டி லிசின் என்ற 21 வயது இளைஞரும், ஒலாகா புடுனோவா என்ற 45 வயது பெண்ணும் காதலித்து வருகின்றனர். சீரியல் கில்லர்கள் குறித்து அதிக ஆர்வமுடைய டிமிரிட்டி லிசன், மனிதர்களை கொலை செய்து, உடலை தின்னும் சடங்குகள் குறித்தும் அதிகமாக வாசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்.
இந்நிலையில், தனது காதலியின் வீட்டுக்கு சென்ற டிமிரிட்டி, மது பாட்டிலால் அவளது தலையில் 25 முறை கொடூரமாக தாக்கி அவரை கொலை செய்துள்ளான். அதனைத் தொடர்ந்து அவளது மூளையை எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளான்.
இதையடுத்து, ஒலாகா புடுனோவாவின் கொலை தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் சைக்கோ கொலைகாரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தனது காதலியை கொடூரமாக கொலை செய்து மூளையை வறுத்து தின்ற சைக்கோ கில்லர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.