22.07.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசி பலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 6ம் திகதி, துல்ஹாதா 8ம் திகதி, 22.7.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, தசமி திதி மாலை 6:53 வரை; அதன் பின் ஏகாதசி திதி, விசாகம் நட்சத்திரம் மதியம் 3:14 வரை;
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரணயோகம்
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
பொது : சூரியன் வழிபாடு.
மேஷம்:
பிறருக்கு உதவுகின்ற எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆதாயம் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
ரிஷபம்:
பேச்சில் அன்பும், பண்பும் நிறைந்திருக்கும். விலகிய உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
மிதுனம்:
குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தைப் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். வாகனப் பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
கடகம்:
உங்களது நற்செயலை பிறர் ஏளனம் செய்யலாம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். லாபம் சுமார். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம்.
சிம்மம்:
கடந்தகால பணிகளுக்கான நற்பலன் தேடிவரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். உறவினர் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
கன்னி:
உறவினரின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணியை நிறைவேற்றுவீர்கள். லாபம் உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு இனிதாக நிறைவேறும்.
துலாம்:
பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். விரிவாக்கப்பணிக்காக கடன் வாங்குவீர்கள். பிராணிகளிடம் இருந்து விலகியிருப்பது நல்லது.
விருச்சிகம்:
நண்பர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். வாகனப் பயணத்தால் இனிய அனுபவம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர்.
தனுசு:
உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.லாபம் திருப்தியளிக்கும். பணக்கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.
மகரம்:
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
கும்பம்:
நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மீனம்:
மனதில் குளறுபடி ஏற்பட்டு விலகும். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். வீடு, வாகன வகையில் மராமத்து செலவு உண்டாகும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.