Loading...
வவுனியா செய்திகள்:காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவர் வவுனியாவில் இன்று மாலை சாவடைந்துள்ளார்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 500 நாட்களையும் தாண்டி சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்தில் தனது சகோதரனை காணவில்லை எனத் தெரிவித்து போராட்ட களத்தில் சுழற்சி முறையில் போராடி வந்த இராசநாயகம் நிலா (வயது 24) என்ற யுவதி மாலை மரணமடைந்துள்ளார்.
Loading...
உடல் நலக் குறைவு காரணமாக குறித்த யுவதி மரணமடைந்துள்ள போதும், தொடர்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமையால் மன அழுத்தம் மற்றும் உடல் நலக்குறைவு என்பவற்றால் பாதிப்படைந்திருந்தார்.
இந்நிலையில் தனது சகோதரனுக்கு என்ன நடந்தது எனத் தெரியாமலேயே குறித்த யுவதி மரணமடைந்துள்ளார்.
Loading...