வெற்றிலை கொடுப்பது பாரம்பரியம் மட்டுமல்ல அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. வெற்றிலை செரிமானத்திற்கு மட்டுமே என்று அதன் பலன்கள் சுருக்கப்டுகிறது,
அதன் முழு பயன்பாடும் தெரிந்தால் நம்முடைய தினசரி உணவில் கட்டாயம் வெற்றிலையை சேர்த்திவிடுவோம்.
வெற்றிலை சாப்பிட வேண்டியதன் மகத்துவத்தை இங்கு பார்ப்போம்.
வலி நிவாரணி
வெற்றிலை அனைத்து வலிகளுக்கும் நிவாரணி ஆகும். வெட்டுக்கள், சிராய்ப்புகள், வீக்கம் என அனைத்திற்கும் வெற்றிலையை பயன்படுத்தலாம். வெளிப்புற காயங்களுக்கு
வெற்றிலையை அரைத்து பசையாக்கி காயங்களின் மேல் தடவலாம், உட்புற வலிகளுக்கு வெற்றிலையை மென்றோ அல்லது சாராகவோ குடிக்கலாம். இதன்மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இரைப்பை வலி
வெற்றிலை கெர்ட் (GERD) எனப்படும் இரைப்பையில் ஏற்படும் நோயை கட்டுப்படுத்துகிறது. இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நச்சுப்பொருட்கள் சிறிதளவும் இல்லை. மேலும்
சமநிலையற்ற பிஹெச்(PH) ஆல் ஏற்படும் அமிலத்தன்மையை குறைக்கிறது. இது பிஹெச்(PH) அளவை சீராக்குவதோடு இரைப்பையை சுத்திகரிப்பு செய்வதிலும் உதவுகிறது. எனவே
இரைப்பை வலி ஏற்பட்டால் உடனடியாக வெற்றிலையை சாப்பிடுங்கள்.
பசியை அதிகரித்தல்
எடை குறைக்க விரும்புவர்கள் வெற்றிலையை சாப்பிட வேண்டாம் ஏனெனில் வெற்றிலை உங்களுக்கு அதிக பசியை ஏற்படுத்தும். உங்கள் உடலின் பிஹெச்(PH) அளவு குறைவதே
பசியின்மைக்கு காரணமாகும். வெற்றிலை உங்கள் பிஹெச்(PH) அளவை சீராக்குவதால் பசியை தூண்டக்கூடிய ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கிறது. இது பசியை அதிகரிப்பதுடன் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
நீர்ச்சத்து
வெற்றிலையில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. வெற்றிலையை நசுக்கி அதன் சாறை பாலுடன் கலந்து குடித்துவர அது உடலின் நீரின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும். மேலும் சிறுநீரக கோளாறுகள் இருந்தால் அதனையும் சரிசெய்யும்.
ஆண்மை அதிகரிப்பு
இயற்கை முறையில் ஆண்மை அதிகரிப்பில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.