மாத்தளையில் மனநோயினால் பாதிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட நபருக்கு, பெரும்பான்மையின இளைஞர்கள் செய்த மகத்தான செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
நடேசன் என அழைக்கப்படும் இந்த நபர் மாத்தளை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார். இவர் பல வருடங்களாக அசுத்தமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வந்துள்ளார்.
அவர் அசுத்தமாக உள்ளமையினால் மக்கள் அவரை நெருங்குவதில்லை. அத்துடன் அவரை பைத்தியம் என கூறி அந்தப் பகுதி மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் பொறியியலாளரான சமரநாயக்க என்பவரும் அந்தப் பகுதி இளைஞர்கள் சிலரும் இணைந்து இந்த நபரை மீளவும் பழைய நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
நடேசனின் தலைமுடியை வெட்டி அவரை குளிப்பாட்டியுள்ளனர். பின்னர் சுத்தமான ஆடைகளை அணிவித்து மனிதனாக மாற்றியுள்ளனர்.