இமாசல பிரதேசத்தில் திருமண வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெர்சவுக் என்னும் கிராமத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகன் ஊர்வலம் நடந்த பிறகு மணமகள், மணமகன் வீட்டார் ஒரு வீட்டில் தனித்தனி அறைகளில் இரவில் தங்கினர்.
காலை திருமணம் நடக்க இருந்தநிலையில் அதிகாலை 5 மணி அளவில் இரு வீட்டாரும் தங்கியிருந்த அறையில் மின்சார கோளாறு காரணமாக தீப்பற்றிக் கொண்டது.
இந்த தீ சமையல் அறைக்கும் பரவியதால் அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இதில் சமையல் அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மணமகனின் பெற்றோர், 8 வயது சிறுவன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இதனால் திருமணம் நிறுத்தப்பட்டு , சந்தோஷமாக இருக்க வேண்டிய திருமண வீடு மரண வீடாக மாறியது.