மெழுகுச்சிலைக்கு பெயர் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் தீபிகா படுகோனேவுக்கு சிலை வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: மெழுகுச்சிலைக்கு பெயர் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் தீபிகா படுகோனேவுக்கு சிலை வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் மெழுகுச்சிலைக்கு பெயர் பெற்றது. உலகின் மிகச்சிறந்த சூப்பர் ஸ்டார்களின் மெழுகுச்சிலை இங்கு வைக்கப்படுவது வழக்கம்.
மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது.
தீபிகாவுக்கு மெழுகுச்சிலை
இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த பத்மாவத் படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனின் மெழுகுச்சிலை லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அடுத்த ஆண்டு நிறுவப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபிகா படுகோன் மகிழ்ச்சி
டெல்லியிலுள்ள அருங்காட்சியத்திலும் இச்சிலை உருவாகுவது குறித்து தீபிகா படுகோன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மெழுகுச்சிலை வடிவமைப்பாளர்களுடன் சிலையை வடிவமைப்பது குறித்து அவர் கலந்துரையாடி வருகிறார்.
நினைக்கும் போது
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபிகா, “லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் எனக்கு மெழுகுச்சிலை வைக்கப்படுவதை நினைத்தால் மகிழ்ச்சியாகவுள்ளது.
காத்திருக்கிறேன்
மெழுகுச்சிலை வடிவமைப்பாளர்களுடன் அமர்ந்து உரையாடுவது சிறந்த அனுபவம். சிலை நிறுவப்படும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
பெரும் சர்ச்சையான படம்
பத்மாவதி படத்தின் நாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தீபிகா படுகோன். அந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்பு பெரும் சர்ச்சைக்குள்ளானது.