லண்டன் செல்வதற்கு தயாராக இருந்த விமானத்தில் இளம் பெண் ஒருவர் சிறுநீர் கழித்தது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலாந்தின் தலைநகர் Warsaw விமானநிலையத்திலிருந்து பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் Luton விமானநிலையத்திற்கு புறப்படுவதற்காக Wizz Air நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கடந்த சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 07.30 மணிக்கு தயராக இருந்துள்ளது.
அப்போது விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்த 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், திடீரென்று விமானத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் விமானத்தின் உள்ளே இருக்கும் கழிவறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஏனெனில் விமானத்தில் அப்போது எரிபொருள் நிரப்பப்பட்டு கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் பயணிகள் யாரும் கழிவறைக்கு உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதனால் அந்த பெண் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கபடவில்லை. ஆனால் அவரோ கழிவறைக்கு செல்வதற்கு அடம்பிடித்துள்ளார். இருப்பினும் முடியாத காரணத்தினால், விமானத்தின் கேலரியில் உட்கார்ந்த நிலையில் சிறுநீர் கழித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விமானநிலையத்தில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் அங்கு வந்த பொலிசார் அவரை விமானத்திற்கு வெளியே அழைத்துச் சென்றுவிட்டதாகவும், அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் மது அருந்தியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து Wizz Air நிறுவனம் சார்பில் தெரிவிக்கையில், விமானத்தில் சில விதிமுறைகள் இருக்கிறது. பயணிகள் அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
எரிபொருள் நிரப்பிக் கொண்டிருக்கும் போது, பயணிகள் கழிவறை உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளது.