அவுஸ்திரேலியாவில் விவசாயி ஒருவர் தமது பண்ணையில் உள்ள மொத்த ஆடுகளையும் சுட்டுக்கொல்ல முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வரலாறு காணாத கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள Les Jones என்ற விவசாயி நீடிக்கும் வறட்சியால் தமது பண்ணையில் உள்ள ஆடுகளுக்கு தீவனம் வழங்க முடியாமல் பரிதவித்து வருகிறார்.
மட்டுமின்றி நாளுக்கு 10 ஆடுகள் என தினமும் பட்டினியால் சாவதாகவும் தெரிவித்துள்ள ஜான்ஸ், எஞ்சியுள்ள ஆடுகளை சுட்டுக்கொல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதுவே மனிதாபிமானமுள்ள செயல் என கூறும் அவர், ஆடுகளுக்கு உணவாகும் புற்கள் கூட வறட்சியால் காய்ந்து போயுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுவதாகவும், மொத்தமுள்ள 12 அணைகளில் தண்ணீர் காய்ந்துபோய் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டில் இருந்தே லெஸ் ஜான்ஸ் அவரது பண்ணையை பராமரித்து வருகிறார். சுமார் 1.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் மதிப்பு கொண்ட இவரது பண்ணையை தற்போது
வாங்குவதற்கு கூட எவரும் இல்லை என வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.