ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்துவதைத் தவிர வடக்கு, கிழக்கிலுள்ள மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அர்த்தபுஷ்டியான பணிகள் எதனையும் செய்வதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்கட்சித் தலைவர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சரிவர நிறைவேற்றுவதில்லை என்று ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்துசென்று ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியை உருவாக்கிய அதன் தலைவர் மைத்திரி குணரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு இராஜகிரியவில் இன்று (24.07.2017) பகல் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.