அம்பலாங்கொட பிரதேசத்தில் ஹோட்டலுக்குள் இடம்பெற்ற வித்தியாசமான விருந்து ஒன்று தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக நண்பர்களான இளைஞர், யுவதிகள் சிலர் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஹோட்டலை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கு போதைப்பொருள் மற்றும் கஞ்சா பயன்படுத்திய இளைஞர், யுவதிகள் 19 பேரை கைது செய்துள்ளனர்.
பேஸ்புக் ஊடாக அறிந்து கொண்ட இளைஞர், யுவதிகள் சிலர் அம்பலாங்கொட, ஆதாதொல ஹோட்டலுக்குள் இந்த விருந்தை நடத்தியுள்ளனர்.
இரவு ஆரம்பித்த விருந்து அதிகாலை வரை இடம்பெற்றுள்ளது. இங்கு போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருந்தில் கலந்து கொண்ட யுவதிகள் பலர் நிர்வாண நடனத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் பல யுவதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விருந்து தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் இரவு முதல் அதிகாலை வரை ஹோட்டலுக்கு வெளியே நின்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த விருந்தில் கிட்டத்தட்ட 250 இளைஞர், யுதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விருந்தில் கலந்து கொள்வதற்கு 2000 ரூபாய் டிக்கட் பெற்றுக் கொள்ள வேண்டும் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 பேர் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 9 பேருக்கு 4500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.