வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சையின் வரிசையில் அடுத்த சர்ச்சையாக அனந்தி சசிதரன் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயுதீன் தொடர்பான அலுவலக நெருக்கம் தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகின்றது.
வடக்கு மாகாண அமைச்சரான அனந்தி சசிதரன் முன்னாள் போராளி எழிலனின் மனைவி என்ற நிலையில் , தற்போது வடக்கு மாகாண அமைச்சராக கொழும்பு நடுவன் அரசுடனான உறவை பேனவேண்டிய கடப்பாடு உண்டு.
இருப்பினும் தனக்கு அடையாள அட்டைக்கான கடிதம் ஒன்றை வழங்குமாறு போரும் படைத்தது அமைச்சர் ரிசாட்டின் அலுவலகத்தில் இருந்து தொலை நகல் அனுப்பும் தேவை தொடர்பிலேயே தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.
அதாவது கடந்த வாரம் தனது தேசிய அடையாள அட்டையை மாற்றுவதற்காக தனது அமைச்சுப் பதவியினை உறுதி செய்து கடிதம் வழங்குமாறு பிரதம செயலாளரை கோரியிருந்தார்.
அவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கடிதமானது அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அலுவலக இலக்க தொலை நகலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.