100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அதிக விடயத்தில் அவர்கள் நகைகளை விற்பனை செய்த நகைக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் நாமக்கல்லில் 100 பவுனுக்கும் மேல் நகைகளை கொள்ளையடித்ததும், அந்த நகைகளை மனைவியிடம் கொடுத்து அனுப்பி நாமக்கல்லில் உள்ள அட்டிகா என்ற நகைக்கடையில் நகைகளை விற்றதும் தெரியவந்தது.
திருடிய நகைகளை அட்டிகா அடகு கடையில் வைத்து பணம் வாங்கிய ரசீதுகளை கைப்பற்றி நகைகடையில் நகைளை மீட்பதற்காக சென்ற போது அட்டிகா நகைக்கடையில் பணியாளர்கள் நகைகளை கொடுக்க முடியாது என்று மறுத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தனிப்படை இன்ஸ்பெக்டர் மதன் திருட்டு நகைகளை வாங்கிய உங்களை விசாரிக்க வேண்டும் என்று நகைக்கடை மேலாளரும், நகை மதிப்பீட்டாளருமான தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த முருகேசன் சேல்ஸ் பொறுப்பாளர் சேலம் மாவட்டம் மேட்டூர் செட்டிகாட்டுப்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேரையும் விசாரணைக்கு அழைத்து வந்து திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து பொலிசார் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக நகைக்கடை உரிமையாளர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாபு மற்றும் தமிழக பிரதிநிதி ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேர் மீதும் பொலிசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை தம்பதியினர் இலங்கைக்கு தப்பித்து செல்ல முற்படுகையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவரம்பூர் துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில் இருக்கும் அகதிகள் முகாமில் வட்டி தொழில் செய்து வருபவர் 50 வயதான இலங்கை அகதி தேவகுமாரி.
இவர் கடந்த 4ம் தேதி அய்யம்பட்டி சாலையில் நடந்து செல்லும் போது 3 பேர் கத்தியை காட்டி 10 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி சென்றனர்.
இதில் சந்தேகத்தின் பெயரில் அகதிகள் முகாமில் உள்ள சிவகுரு, விக்னேஷ் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து துவாக்குடி போலிசிடம் ஒப்படைத்தனர்.
இவர்களின் கூட்டாளி ராஜா என்பவன் நாமக்கல் அகதிகள் முகாமை சேர்ந்தவன் என்றும் அவன் கணவன் மனைவியாக தலைமறைவாகி இருப்பதும் பொலிசிற்கு தெரியவந்ததும் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இளம் வயது கணவன் மனைவியாக இரண்டு பேர் திருட்டு நடந்த இடத்தில் அருகே உள்ள தெருக்களில் எல்லாம் வீடு வாடகைக்கு கேட்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், வீடு வாடகைக்கு கேட்டு தெருக்களில் சுற்றும்போது பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பட்டபகலில் அந்த வீடுகளில் கைவரிசை காட்டினோம்.
2004 முதல் சைக்கிள் மற்றும் பைக் திருடுவது பழக்கமாகி என்மீது நாமக்கல் காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவு செய்தனர். இதன் பிறகு 3 வருடம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனியாக இருந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக இதுவரைக்கும் 100 பவுனுக்கு மேல் கொள்ளையடித்த நகைகளை எல்லாம் நாமக்கலில் உள்ள அடகு நகைகடைகளில் வைத்து பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த தம்பதியினர் குறித்து அனைத்து காவல்நிலையத்திற்கும் தெரியப்படுத்தி வைத்திருந்த நிலையில் இலங்கைக்கு தப்பி செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் தனிப்படை பொலிசாரால் என்.ஐ.டி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்
தற்போது இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் தாங்கள் திருடிய நகைகளை வாங்கி நகைக்கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.