உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் Whats App ஊடாக அதிகம் பரபரப்பப்படும் வதந்திகளை தடுப்பதற்கு புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
Whats App நிறுவனம் இதனை தடுப்பதற்கு சில நடவடிக்கைகளை முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய Whats Appஇல் வெளியாகும் ஒரு செய்தியை 5 பேருக்கு மாத்திரம் பகிர்வதனை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை இந்தியாவில் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
250 பேர்களுக்கு பகிர்வதற்கான வசதிகள் உள்ளது. எனினும் முதலில் 20 பேர் வரை இதனை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுகின்றதுஃ
கிட்டத்தட்ட 250 மில்லியன் Whats App பயனர்களை கொண்ட இந்தியாவில் அதிக வதந்திகள் பரபரப்பப்படுகின்றது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றது.
அதற்கமைய இந்த வதந்தியை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.