சிறையில் இருக்கும் மஹத்துக்கு இரவு உணவாக களி கொடுக்கப்பட்டது. களி உருண்டையை சாப்பிட்டுக் கொண்டிருந்த மஹத்தைக் கண்டு பாலாஜி கண்ணீர் வடித்தார். (அவரென்ன ஆயுள் தண்டனை கைதியா சார்?).
நேற்றைய தினம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. மும்தாஜ், ஜனனி தலைமையில் வீட்டில் உள்ளவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டனர். சமையலறை, கழிவறை, படுக்கையறை உள்ளிட்ட இடங்கள் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் எந்த அணி அதிக இடங்களை கைப்பற்றுகிறதோ அதுவே வெற்றி பெற்ற அணி. தோற்ற அணி எதிரணியின் இடத்துக்கு செல்ல முடியாது. இதுதான் அந்த டாஸ்க்.
கொடுக்கப்பட்ட இரண்டு டாஸ்க்கிலும் ஜனனி அணியே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணி சமையல் அறையையும் கார்டன் பகுதியையும் கைப்பற்றிக் கொண்டது. எதிரணியில் இருப்பவர்கள் சமையலறை செல்ல வேண்டுமென்றால் வெற்றி பெற்ற அணியினர் கொடுக்கும் வேலையை செய்து விட்டு சமையலறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கிடையில் டேனியலோடு முட்டிக் கொண்டிருந்த ஜனனி இப்போது அவனுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது பாலாஜின் குற்றச்சாட்டு. சென்றாயனிடமும், மஹத்திடமும் புலம்பிக் கொண்டிருந்தார்.
சமையலறையை பயன்படுத்திக் கொள்ள மும்தாஜ் ஐஸ்வர்யாவிடம் அனுமதி கேட்டார். அதற்கு ’உங்களுக்காக ஒரு டாஸ்க் உள்ளது அதை செய்து விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று ஐஸ்வர்யா கூறியதும் ’அது என்ன டாஸ்க் என்று கேட்டு சொல்லுங்கள்’ என்று ரித்விகா கூறினார்.
”நான் ஒன்னும் உங்க பப்பெட் (puppet) இல்லை” என்று ஐஸ்வர்யா கூறினார். அதோடு பிடித்துக் கொண்டது சண்டை.
’நீ எப்படி என்னை கேட்டுச்சொல்ல சொல்லலாம். நான் ஒன்னும் குழந்தை இல்லை’ என்று ஐஸ்வர்யாவும் ‘நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். நீங்களாக கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல’ என்று ரித்விகாவும் மாறி வாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாதி நாளை ஆக்கிரமித்துக் கொண்டது இந்த பஞ்சாயத்து. இடையில் மும்தாஜுக்கும் ஜனனிக்கும் வழக்கம்போல முட்டிக் கொண்டது. சாதாரண விஷயத்தை ஐஸ்வர்யா பெரிதாக்குவது நிஜமான கோபமா அல்லது கவனத்தை ஈர்க்கும் உத்தியா என்பது இந்த வார இறுதியில் தெரிந்து விடும்.