ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட
கணவன் – மனைவி உறவுகளில் பல்வேறு காரணங்கள் சொல்ல ப்படுகிறது. அப்பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொண்டா லே ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க முடியும்.
பெண்களே உணர்வுகளை கணவரிடம் வெளிப்படுத்த தயங்க வேண்டாம்
கணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான, ஒளிவு மறைவு இல்லாத தொடர்பாடல் இருக்க வேண் டும். தெளிவாக பேச வேண்டும், உண்மையைப் பேச வேண்டும். ஒருவருக்கு ஒருவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்
உங்கள் துணை மீது உள்ள ஆர்வத்தை குறைத்து கொள்ளாதீர்கள். ஆசையை வெளிப்படுத்துதல், கொஞ்சுதல், விளையாட்டாக நடந்து க்கொள்வது என உங்கள் துணைமீதான ஆர்வத்தை வெளிப்படுத்த மறக்க வேண்டாம், மறுக்க வேண்டாம்.
உடலுறவு என்பது அவசியமானது தான். ஆனால் துணையாக இருந்தாலும் விருப்பதுடன் இணைவதுதான் இனிமை. சரியான நேரங்களில் இருவரின் புரிதலுடன் இணைவது தாம்பத்தியம் சிறக்க உதவும். தாம்பத்தியத்தில் இருவருக்குள்ளும் புரிதல் இருப்பது மிகவும் அவசியமானது.
உங்களின் உணர்வுகளை கணவரிடம் வெளிப்படுத்த தயங்கவேண் டாம். கோபத்தை கொட்டுவதுபோல மகிழ்ச்சி அழுகை என அனை த்தையும் வெளிப்படையாக காட்டுங்கள். இதுதான் உங்கள் இருவ ர் மத்தியிலான நெருக்கத்தை அதிகப்படுத்தும் கருவி. எந்த ஒரு செயலாக இருப்பினும் அதைதைரியமாக செய்யுங்கள். வேலை யாக இருந்தாலும் சரி, இல்லறமாக இருந்தாலும் சரி, தைரியம் தான் உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.