தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, தன்னை பாலியல் தொழிலாளி என்றும் தான் கைது செய்யப்பட்டதாகவும் வதந்திகளை பரப்புபவர்கள் அதே புகாரில் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார்.Srireddy warning youtube channels Tamil Cinema
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-
நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் மொழி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னுடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பான சாட்டிங் ஆதாரங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீ லீக்ஸ், தமிழ் லீக்ஸ் என வெளியிட்டு வந்தார். இதில் பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர்கள் அடிப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஸ்ரீரெட்டி அடுத்து என்ன தகவலை வெளியிட போகிறாரோ..? யாரெல்லாம் சிக்கப்போகிறார்களோ என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஸ்ரீரெட்டியின் அதிரடியால் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவும் அல்லோல கல்லோலப்பட்டது
இந்நிலையில், பணம் பறிக்கும் நோக்கில் ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகினர் மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை கூறுவதாக இயக்குநரும் நடிகருமான வாராகி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதாவது, ஸ்ரீரெட்டி மீது விபச்சார தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து சில யூட்யூப் சேனல்கள் விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், காலையிலேயே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த யூட்யூப் சேனல்களுக்கு சாபமிட்டு மிரட்டியுள்ளார் ஸ்ரீரெட்டி.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது.. :-
”நான் கைது செய்யப்பட்டு விட்டேன் என்றும் நான் ஒரு பாலியல் தொழிலாளி என்றும் வதந்திகளை பரப்புபவர்கள் அதே கேஸில் கைது செய்யப்படுவீர்கள்.
இது என் சாபம். நான் பாலியல் தொழிலாளி அல்ல. நீங்கள் தான் பாலியல் தொழிலாளிகள். ஏனென்றால் வதந்திகளை பரப்பி ஒரு பெண்ணை வைத்து பணம் சம்பாதிக்க பார்க்கிறீர்கள்.
இதற்கு பாலியல் தொழில் எவ்வளவோ நல்லது. நீங்கள் மலத்தில் கிடக்கும் பூச்சிகள். சில யூட்யூப் சேனல்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.”
என யூட்யூப் சேனல்கள் மீது பாய்ந்துள்ளார் ஸ்ரீரெட்டி.