தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகை என்றால் அது நடிகை மும்தாஜ் தான். பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்காத அவர் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
மும்தாஜ் 1980 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ‘நக்மா கான்’. சினிமாவிற்காக தனது பெயரை மும்தாஜ் என்று மாற்றிக்கொண்டார் இவர் தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளை கற்றுள்ளார்.
ஆரம்பக் காலத்தில் மும்தாஜ் மும்பையில் மாடலிங் செய்து வந்தார். ‘மோனிஷா என் மோனாலிஷா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கு மோனிஷா என்று டி.ராஜேந்தர் பெயர் வைத்தார். அந்த பெயர்தான் படத்திலும் வரும். ஆனால். அந்த பெயர் பிடிக்காமல் மும்தாஜ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார் நக்மா கான்.
அதன் பிறகு எஸ்.ஜெ. சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் ‘கடிப்புடி கட்டிபுடி டா’ என்ற பாடலுக்கு மும்தாஜ் ஆடிய ஐட்டம் டான்ஸ் பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு, குத்து பாடல்களுக்கு மட்டும் மும்தாஜ் நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
நடிகை சிம்ரனின் தங்கை மோனல் மற்றும் அவரது காதலர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவத்திற்கும் மும்தாஜ்க்கும் தொடர்பு இருப்பதாக நடிகை சிம்ரன் கூறி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது . ஆனால் இது அவரது படவாய்ப்புகளை அதிக அளவு பாதிக்கவில்லை
அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கின. தன்னை அறிமுகம் செய்த டி. ராஜேந்தர் உடன் 2007ல் வீராசாமி என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவரது சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது.
அவரது உடலும் பருமன் அடைந்தது. இதனால் அவரை எந்த ஒரு இயக்குனரும் ஒப்பந்தம் செய்யவில்லை.சில வருடங்கள் கடினமாக உழைத்து மீண்டும் தனது கட்டான உடல் அமைப்புடன் மும்தாஜ் திரைக்கு வந்தார். 2009 ஆம் ஆண்டு கடைசியாக ராஜாதி ராஜா படத்தில் லாரான்சுக்கு வில்லியாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்தஅளவுக்கு ஒடாததால் அவர் திரைதுறையிலிருந்து விலகிவிட்டார்.
இந்நிலையில்அவர் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளர். பல ஆண்டுகளுக்கு பிறகு மும்தாஜ்ஜை சின்னத் திரையில் பார்க்கும் வாய்ப்பு அவரது ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.