26.07.2018 வியாழக்கிழமை இன்றைய ராசி பலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 10ம் திகதி, துல்ஹாதா 12ம் திகதி, 26.7.18 வியாழக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 12:24 வரை; அதன் பின் பவுர்ணமி திதி, பூராடம் நட்சத்திரம் இரவு 11:09 வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு, கரிநாள்.
மேஷம்:
எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். தாமதமான செயல் கூட எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு உதவி செய்வீர்கள்.
ரிஷபம்:
மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கும். சமூகப் பணி புரிவதில் ஆர்வம் உண்டாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். நிலுவைப் பணமும் வசூலாகும். விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.
மிதுனம்:
சுயநலத்துடன் சிலர் உங்களிடம் அணுகலாம். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கலாம். உடல்நலனில் அக்கறை தேவை.
கடகம்:
மனதில் குழப்பம் உருவாகலாம். நம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர். வாகனப் போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
சிம்மம்:
எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். சமூகத்தில் உங்கள் மீதான நன்மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவு அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
கன்னி:
மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். வருமானம் திருப்தியளிக்கும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.
துலாம்:
சுயநலத்துடன் சிலர் உங்களிடம் பழகலாம். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். உடல்நிலை அதிருப்தி அளிக்கலாம் கவனம். பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவை.
விருச்சிகம்:
பேச்சில் நிதானம் தேவை. தகுதிக்கு மீறிய வாக்குறுதி அளிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.
தனுசு:
நேர்மையை மதித்து செயல்படுவீர்கள். எளிய முயற்சியால் பலமடங்கு நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். வருமானம் உயரும். தாயின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
மகரம்:
உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற கூடுதல் உழைப்பு அவசியம். பெண்களுக்கு வீட்டுச் செலவு அதிகரிக்கும். தீடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.
கும்பம்:
கடந்த கால உழைப்பிற்கு உரிய பலன் தேடி வரும். அவமதித்தவரும் நட்பு பாராட்டி நெருங்குவர். தொழில் வியாபார வளர்ச்சியால் சாதனை படைப்பீர்கள். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர்.
மீனம்:
உங்களின் வளர்ச்சி கண்டு பிறர் பொறாமைபடுவர். கூடுதல் உழைப்பால் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பெண்கள் சிக்கனத்தால் சேமிக்க முயல்வர். பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் கிடைக்கும்.