Loading...
இந்தியாவில் முதியவர் ஒருவர் உலகை விட்டு செல்ல விரும்புவதாக கூறி தனக்கு தானே சமாதி அமைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் லச்சி ரெட்டி (70). இவர் தன்னுடைய நிலத்தில் சமாதி ஒன்றை அமைத்துள்ளார்.
பின்னர் பொலிசுக்கு போன் செய்த லச்சி, கடவுள் தன்னை அழைப்பதாகவும், உலகை விட்டு தான் செல்ல விரும்புவதாகவும் கூறி அதிரவைத்தார்.
இதையடுத்து லச்சி இருக்கும் இடத்துக்கு வந்த பொலிசார் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்தனர்.
Loading...
விசாரணையில் லச்சி ஆன்மீக சிந்தனையை அதிகம் கொண்டவர் எனவும், அடிக்கடி பூஜைகள் செய்பவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் குடும்பத்தை பிரிந்து லச்சி வாழ்ந்து வருவதும் தெரியவந்துள்ளது.
Loading...