21ஆவது நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது.
சரியான நேர்கோட்டில் அமையவுள்ள சந்திரகிரகணமான மிக நீண்ட நேர சந்திர கிரகணம் இதுவாகும்.
21ஆவது நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு உலக மக்கள் மற்றும் இலங்கை மக்கள் ஆயத்தமாகியுள்ளனர்.
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும் போது ஏற்படுகின்றது.
சாதாரணமாக சந்திர கிரகணம் சில மணித்துளிகள் நீடித்து பின் படிபடியாக விலகிவிடும்.
எனினும் இன்றைய சந்திரகிரகணம் தான் மொத்தம் 103 நிமிடங்கள் காணப்படும்.
தெளிவான வானம் காணப்பட்டால், இன்று இரவு 11.54 மணி முதல் அதிகாலை 3.49 மணி வரை இது .
அத்துடன், இதற்கிடைப்பட்ட நேரமான 1மணி முதல் 2.43 மணி வரை முழு சந்திர கிரகணத்தை காணலாம் என அறிவியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.