iPhoneகளில் WhatsApp பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
iPhoneகளில் உள்ள WhatsApp செயலியில் புதிய அப்டேட் செய்தால் புதிய வசதி ஒன்றை பெற்றுகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட்டில் இதுவரை இல்லாத புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது.
iPhoneகளில் உள்ள Apple Siri வசதியை பயன்படுத்தி WhatsApp ஊடாக குழுக்களுக்கிடையே சாட் செய்து கொள்ள முடியும்.
Siri யை செயற்படுத்தி Send Messageயை தெரிவு செய்து WhatsApp குருப்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும்.
இதனை குரல் வழி ஊடான கட்டளையாகவே மேற்கொள்ளப்படலாம். 2.18.80 எனும் குறித்த புதிய பதிப்பானது 166.3 MB கோப்பு அளவுடையதாக இருப்பதுடன் iOS 7 இயங்குதளப் பதிப்பு மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக இருக்கும்.