தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவரது அடுத்து வெளிவரக்கூடிய படங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள சீமராஜா படத்தின் டீஸர், பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டாவின் புதிய லோகோ வெளியீடு குறித்த அறிவிக்கப்பட்டது.
இதனால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டுவிட்டரில் மோத ஆரம்பித்துள்ளனர்.
இருவரது ரசிகர்களும் அதிகம் டுவிட் செய்து டிரெண்டிங் செய்ய தொடங்கினர். தற்போது வரை இந்த மோதல் முடியவில்லை தொடர்ந்து வருகிறது.
சீமராஜா படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது. இந்த நிலையில், கவுதம் மேனன் ஏற்கனவே வெளியான விசிறி பாடலின் இன்னொரு வடிவமைப்பை வெளியிடுவதாக அறிவித்து உள்ளார்.
எனவே ரசிகர்களின் மோதல் இன்னொரு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களது மோதலுக்கு ஏற்ப படகுழுவினரும் படங்கள் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.