யாழ்ப்பாணம் அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் உள்ள அம்மன் குளத்தில் இருந்து ஆட்லெறி செல்லின் விசிறி (ஃபான்) இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச செயலகத்தினால், மணியம் தோட்டம் பகுதியில் உள்ள அம்மன் குளத்தினை தூர்வாரப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தூர்வாறும் போது குளத்தில் இருந்து புகை எழும்பியுள்ளது.
புகை எழும்புவதைக் கண்டு, அமாநுசியம் அல்லது மனித எச்சங்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தில் தூர்வாறுவதை நிறுத்தியதுடன், சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் யாழ்.நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிறப்பு அதிரடிப்படையின் இணைந்து, நல்லூர் பிரதேச சபை மீண்டும் குளத்தினை தூர்வாறும் நடவடிக்கையை இன்று முன்னெடுத்தது. அந்த குளத்தில் இருந்து , பழைய ஆட்லெறி செல்லின் விசிறி (ஃபான்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.