திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து நள்ளிரவுக்கு மேல் அவரை காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
அங்கு வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பரவியதும் திமுகவினர் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைக்கு வெளியே குவிந்து விட்டனர்.
தொண்டர்கள் குவிந்து வருவதால் காவேரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். விரைவில் காவேரி மருத்துவமனையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.