தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி, படுக்கைக்கு அழைத்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டினார் நடிகை ஸ்ரீரெட்டி.
ஆனால் இவரின் குற்றச்சாட்டுகளை தெலுங்கு திரையுலகினர் கண்டு கொள்ளாமல் இவருடைய பெயரை தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் ஸ்ரீரெட்டி தெலுங்கு பிலிம் சேம்பர் முன்பு அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.
தெலுங்கு திரையுலகில் இவர் நடத்திய போராட்டதை யாரும் கண்டு கொள்ளாததால், இவருடைய கவனம் தமிழ் திரையுலகின் மீது திரும்பியது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது முதல் முதலில் குற்றம் சுமத்த துவங்கிய இவர் இதை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், சுந்தர்.சி, சந்தீப் கிஷன் ஆகியோர் தன்னை பயன்படுத்தி கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார்.
நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து, பல நடிகர்கள் மீதும், இயக்குனர்கள் மீதும் பாலியல் ரீதியான குற்றங்களை முன் வைத்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்
இந்த புகாரில், நடிக்க வாய்ப்பு கேட்டு ஸ்ரீரெட்டி ஏமாற்ற படவில்லை என்றும், அவர் விபச்சாரம் செய்துள்ளார் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் வாராகியின் புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகை ஸ்ரீரெட்டி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் தற்போது புகார் கொடுத்துள்ளார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை ஸ்ரீரெட்டி, நான் விபச்சாரி இல்லை என்பதை வாரகிக்கு தெரியப்படுத்த விரும்புவதாகவும். இதுவரை என்னை பலர் வாய்ப்பு கொடுப்பதாக கூறி ஏமாற்றியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும் இதுவரை நான் குற்றம்சாட்டியுள்ள, ஸ்ரீகாந்த், சுந்தர்.சி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோரிடம் ஒரு பைசா கூட வாங்கியது இல்லை என்று கூறினார். என்னை போல் மற்றவர்கள் ஏமாறக் கூடாது என்பதற்காகவே நான் என் வாழ்க்கையை பற்றி கவலை படாமல் சினிமாவில் நடக்கும் அநீதிகளை முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.