இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நேற்று இரவு 11.54 மணிக்கு தொடங்கியது.
இந்த சந்திர கிரகணம், நள்ளிரவு வரை நீடித்து இருக்கும். இது சுமார் 6 மணி நேரங்களுக்கு மேல் நீடிக்கும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நேற்று இரவு 11.54 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம் இன்று அதிகாலை 3.49 மணி வரை நடைபெற்றது. கிரகண காலங்களில் 6 மணி நேரத்துக்கு முன் கோவில் மூடப்படுவது வழக்கம்.
எனினும், இம் முறை சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் 12 மணி நேரம் மூடப்பட்டது.
கிரகணம் முடிந்த பின் கோவில் திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்டவை செய்து, காலை 7 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளையும், பவுர்ணமி அன்று இரவு நடைபெறும் கருட சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்தது. திருமலையில் செயல்பட்டு வரும் அன்னதான கூடங்களும் நேற்று மாலை 5 மணிக்கு மேல் மூடப்பட்டமை ஆச்சரியமாக பார்க்கப்படுகின்றது.
என்னும், இல்லாதவாறு இம்முறை நடைபெற்றமையினால் பாக்தர்கள் ஆச்சிரியத்தில் மூழ்கியுள்ளனர்.