Loading...
பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை மீண்டும் நடத்தக்கோரி அரசியல் கட்சியொன்று வலியுறுத்தியுள்ளது.
Loading...
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கான் வெற்றிபெற்றுள்ளதாக அவரது தெரிக்-இ-இன்சாப் கட்சி அறிவித்துள்ள நிலையில், ஏனைய கட்சிகள் தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன.
இதன் காரணமாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகளை சில அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கட்சி ஒன்றின் தலைவர் புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...